Trending News

பௌத்தர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய ஆணைக்குழு நியமனம்

(UTV|COLOMBO)-பௌத்த சாசனம், பௌத்தர்களின் கௌரவம் மற்றும் அவர்களின் உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு பௌத்த உரிமைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்க அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதான மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்துடன் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் ஜகத் சுமதிபால தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணி பாலித பிரணாந்து நியமிக்கப்பட்டுள்ளார்.  இதன் செயலாளராக ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா நிமல் வாகிஸ்ட நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாணைக்குழுவில் 21 பேர்  அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

මහජන ආරක්ෂක ඇමති ආනන්ද විජේපාලගේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී ධූරය බලරහිත කරන ලෙස ඉල්ලා, අභියාචනාධිකරණයට පෙත්සමක්

Editor O

Three Lankans in Singapore sent to jail for forged Malaysia Visas

Mohamed Dilsad

முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பம் – அமைச்சர் ரிஷாட், ஹஸனலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்…

Mohamed Dilsad

Leave a Comment