Trending News

ஜோர்ஜியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

(UTV|COLOMBO)-ஐந்தாவது திறந்த அரசாங்க கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளார்.
ஜோர்ஜிய தலைநகரில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்ற பொழுது அந்த நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் ஷாவே ஸிட்சேயினால் வரவேற்கப்பட்டார்.
ஐந்தாவது திறந்த அரசாங்க கூட்டுறவு மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறும். இந்த மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்வார்.
பிரஜைகள் ஈடுபாடு ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் சிறந்த பொதுச் சேவை வழிகாட்டல் போன்ற விடயங்கள் குறித்து மாநாட்டில் ஆராயப்படும். இன்றைய  தினம் இடம்பெறவுள்ள மாநாட்டின் முக்கிய உயர் மட்ட குழு கலந்துரையாடலிலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொள்வார்.
அதேவேளை ஜோர்ஜிய ஜனாதிபதி ஜியோஜி மாக்வெலஸ்விலியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Neeson, Walsh join “The Honest Thief”

Mohamed Dilsad

கடந்த கால பிழைகள் அனைத்தும் சீர்த்திருத்தப்பட வேண்டும்

Mohamed Dilsad

2017 GCE (A/L) Z-Score Released

Mohamed Dilsad

Leave a Comment