Trending News

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதிக்கு-நீதியமைச்சு

(UTV|COLOMBO)-பாரிய போதைப்பொருள் வர்த்தக குற்றச்செயல்களில், நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று ஜனாதிபதிக்கு வழங்க உள்ளதாக நீதியமைச்சு கூறியுள்ளது.

ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மதானத்திற்கு அமைவாக நிதியமைச்சினால் அந்தப் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையொப்பமிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு எதிர்வரும் தினங்களில் பேச்சுவார்த்ததை நடத்த உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமானால் விரைவாக செய்யப்பட வேண்டிய விடயங்கள் சில இருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரதமர் ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

Mohamed Dilsad

බිමවැටී ඇති දත්ත සම්ප්‍රේෂණ රැහැන් ගැන මොබිටෙල් සමාගමෙන් විශේෂ ඉල්ලීමක්

Editor O

திருகோணமலையில் கடும் காற்றுடன் பரவலாக மழை

Mohamed Dilsad

Leave a Comment