Trending News

ஆனந்த ,நாலந்த மாணவர்கள் மோதல் : 15 மாணவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரி மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரி மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் பாடசாலை நேரம் நிறைவடைந்ததன் பின்னர் மருதானை மற்றும் பொரளை காவற்துறை பிரிவுகளில் இரண்டு இடங்களில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதன் போது 8 மாணவர்கள் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் காரணமாக வீதியில் பயணித்த அரச பேரூந்தொன்றும் , தனியார் பேரூந்தொன்றும் , வேன் வாகனங்கள் இரண்டும் மற்றும் சிற்றூர்ந்து ஒன்றுக்கும் கடும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் குறித்த பிரதேசங்களில் காவற்துறை குவிக்கப்பட்டுள்ளதாகவும் , குறித்த பகுதிகளில் அமைதி நிலவுவதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொரளை மற்றும் மருதானை காவற்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.

Related posts

SEVEN SUSPECTS ARRESTED WITH KUDU ROSHAN FURTHER REMANDED

Mohamed Dilsad

எரிபொருள் விலை சீர்திருத்தம் குறித்து தீர்மானம்

Mohamed Dilsad

රුසියාවට ඩ්‍රෝන ප්‍රහාරයක්

Editor O

Leave a Comment