Trending News

சவுதியில் கார் ஓட்டிய பெண்களை ரோஜா கொடுத்து வரவேற்ற போலீசார்

(UTV|SAUDI)-இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய  பெண்கள் கைது செய்யப்பட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை  சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நேற்று முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது.

இந்நிலையில்,  கார் ஓட்டியை பெண்களை வரவேற்கும் விதமாக பெண்களுக்கு போலீசார் ரோஜா பூ கொடுத்தனர். ரோஜாக்களுடன் ‘சகோதரிகளே, பாதுகாப்பாக ஓட்டவும்’ என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், சமூக ஆர்வலர்களும் மலர்கள் வழங்கினர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

Ashok Pathirage appointed SriLankan Airlines Chairman

Mohamed Dilsad

இதுவரை 2289 பேர் கைது

Mohamed Dilsad

Leave a Comment