Trending News

தேவை ஏற்படின் என்னால் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு பணம் வழங்க முடியும்

(UTV|COLOMBO)-தேவை ஏற்படின் தன்னால் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு பணம் வழங்க முடியும் என அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

தான் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியலுக்காக எவரிடமும் பணம் வாங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கியதாக தற்போது தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை சபாநாயகர் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் உள்ள எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் அர்ஜுன் ஆலோசியஸிடம் இருந்து பணம் பெறவில்லை என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

PAFFREL calls for new laws on presidential candidates

Mohamed Dilsad

Party Leaders to meet today

Mohamed Dilsad

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தேர்வு

Mohamed Dilsad

Leave a Comment