Trending News

Avengers Infinity War பார்த்தவர் மாரடைப்பால் மரணம்

(UTV|INDIA)-அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகி இருக்கும் Avengers Infinity War படத்தைப் பார்த்த ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

மிக பிரம்மாண்டமாகத் தயாராகி உலகம் முழுவதும் திரைக்கு வந்திருக்கும் ஹொலிவுட் திரைப்படம் Avengers Infinity War.

இதில் ராபர்ட்டானி, கிறிஸ்கெம்ஸ் வொர்த், பார்க்ரூபலா, கிறிஸ்வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பல ஹொலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் 3D, நவீன தொழில்நுட்பத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு வில்லனுடன் 22 சூப்பர் ஹீரோக்கள் மோதுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ‘திகில்’ நிறைந்த மிரட்டலான அதிரடி காட்சிகள் உள்ளன.

3D யில் இந்த படத்தைப் பார்த்தால் சண்டைக்காட்சிகள் தத்ரூபமாக இருக்கும். துப்பாக்கியில் இருந்து வெளியேறும் குண்டுகள் பார்ப்பவர் மீது பாய்வது போன்ற பிரமையை ஏற்படுத்தும். காட்சி மற்றும் இசை அமைப்பிலும் நவீன தொழில்நுட்பங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஹொலிவுட் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆந்திராவில் உள்ள ஒரு திரையரங்கில் இந்த படத்தைப் பார்க்க பாட்சா என்ற நபர் நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அதிரடி சண்டைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு அதிர்ச்சியில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் உயிரிழந்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Showers and winds to enhance further tomorrow

Mohamed Dilsad

At least 17 injured in Egypt tourist bus blast

Mohamed Dilsad

தேசிய சுற்றாடல் வாரம்

Mohamed Dilsad

Leave a Comment