Trending News

நாடுமுழுவதும் 17 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் நாடுமுழுவதும் 17,028 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 7 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்களும், பெப்ரவரி மாதத்தில் 4 ஆயிரத்து 395 டெங்கு நோயாளர்களும், மார்ச் மாதம் 3 ஆயிரத்து 303 டெங்கு நோயாளர்களும் ஏப்ரல் மாதத்தில் 2 ஆயிரத்து 152 டெங்கு டெங்கு நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30.9% டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

நுளம்பு பரவக் கூடிய இடங்களை சுற்றாடலில் இருந்து அப்புறப்படுத்துவதன் அவசியம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக மக்களை தௌிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக் காட்டுவதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Anuradhapura bank heist: Rs. 80 million worth cash, jewellery robbed

Mohamed Dilsad

சிரியாவில் 580 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

Mohamed Dilsad

GPS, CCTV monitoring systems to be provided for each train station: Minister

Mohamed Dilsad

Leave a Comment