Trending News

மகளிர் தின விழா எதிர்வரும் 17ம் மற்றும் ஏப்ரல் 8ம் திகதிகளில்

(UTV|COLOMBO)-தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் தின விழா எதிர்வரும் 17ம் மற்றும் ஏப்ரல் 8ம் திகதிகளில் மஸ்கெலியா, அகரபத்தனை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இடம்பெறவுள்ளது.

இவ் மகளிர் தின விழாவானது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாபரம் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி மு.ப 10.00 மணிக்கு மஸ்கெலியா நகரிலும் பி.ப 2.00 மணிக்கு டயகம பிரதேசத்திலும் இடம்பெறவுள்ளதோடு ஏப்ரல் மாதம் 8ம் திகதி நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் மு.ப 10.00 மணிக்கும் இடம்பெறவுள்ளது.

நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 பெண் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது மலையக வரலாற்றில் மாபெரும் சாதனை என்றும் அரசியல் களத்தில் பெருந்தோட்ட பெண்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் ஆகவே இடம்பெறவிருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழாவிற்கு அனைத்து மலையக மகளிர் அனைவருக்கும் அழைப்புவிடுப்பதாகவும் ‘பெண்ணை மதிப்போம். பெண் கல்விக்கு வழிவகுப்போம்.

மாதர் அரசியலை மலையகத்தில் வளர்த்தெடுப்போம்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெறவிருக்கும் இவ்விழாவில் மகளிர் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணி தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமாகிய சரஸ்வதி சிவகுரு தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 10ம் மற்றும் 11ம் திகதிகளில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின விழா கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற தன்மையையும் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் கருத்திற்கொண்டு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

මැතිවරණ කොමිෂන් සභාවෙන් විශේෂ දැනුම්දීමක්

Editor O

இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளன

Mohamed Dilsad

Virat Kohli’s masterful 149 rescues India against England

Mohamed Dilsad

Leave a Comment