Trending News

அரசாங்க படைகள் கடுமையான தாக்குதல்

(UTV|SYRIA)-சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, உள்ள கிழக்கு கௌட்டா பகுதியில் பொதுமக்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கௌட்டா பகுதியின் மீது அரசாங்க படைகள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் மாத்திரம்  குழந்தைகள் உட்பட 250க்கும் மேற்ப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இறுதி நகரமாக இது காணப்படுகின்ற நிலையில், அரச படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், போர் நிலைமை கட்டுப்பாடின்றி செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சிரிய இராணுவத்திடம் இருந்து எவ்வித கருத்தும் இதுவரையில் வெளியாகவில்லை.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டம்

Mohamed Dilsad

ලිට්‍රෝ ගෑස් මිල ඉහළට

Mohamed Dilsad

Vijayakala’s case postponed until February

Mohamed Dilsad

Leave a Comment