Trending News

ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு

(UTV|COLOMBO)-மருத்துவபீட மாணவர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் மடுகல்லே புத்தரக்பித தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடந்த 25ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையில் இன்று குறித்த இருவரும் முன்னிலையாகாத நிலையில் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , குறித்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இதன்போது உத்தரவிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Four Police Officers interdicted

Mohamed Dilsad

‘மக்களை கௌரவப்படுத்தினால் அரசியல் பயணம் நிலைக்கும்’-அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

Mohamed Dilsad

Sri Lankan shares rise on foreign buying: Blue chips gain

Mohamed Dilsad

Leave a Comment