Trending News

தேயிலை கொள்வனவு நாடான ரஷ்யா இலங்கைத் தேயிலைக்கு தற்காலிகமாக விதித்துள்ள தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை

(UTV|COLOMBO)-இலங்கையின் பிரதான தேயிலை கொள்வனவு நாடான ரஷ்யா இலங்கைத் தேயிலைக்கு தற்காலிகமாக விதித்துள்ள தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தெரிவித்தார்.

அமைச்சர்களான நவின் திஸாநாயக்க மற்றும் ரிஷாத் பதியுதீன்   தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு இன்றிரவு ரஷ்யாவுக்கு பயணம்
இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு அமைச்சர்களான நவின் திஸாநாயக்க மற்றும் ரிஷாத்  பதியுதீன்  தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவொன்றை இன்றிரவு ரஷ்யாவுக்கு அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினிடம்; தாம் விசேட கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நட்பு நாடு என்ற வகையில் அவர்களது உதவி இலங்கைக்கு கிடைக்கும் என்றும், இது தொடர்பாக தேயிலைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள எவரும் பயப்படத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
இன்று (17) ஹப்புத்தளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு தேயிலை விநியோகிக்கும் கம்பனியொன்றின் தேயிலைப் பெட்டியொன்றில் இருந்த தேயிலைக்கு மட்டுமன்றி விவசாய துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வகை வண்டு இனம் ரஷ்யாவில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைத் தேயிலையை கொள்வனவு செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.
நிறுவனம் தவறிழைத்திருப்பது உறுதியானால் அவர்களது ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தை தடை செய்ய நடவடிக்கை
இந்த விடயத்துடன் தொடர்புடைய நிறுவனம் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த விசாரணைகளில் குறித்த நிறுவனம் தவறிழைத்திருப்பது உறுதியானால் அவர்களது ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Castlereigh Reservoir Oil Leakage: Electricity generation not affected

Mohamed Dilsad

பாகிஸ்தான் அணி தலைவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை

Mohamed Dilsad

தயாரிப்பாளராக காஜல் அகர்வால்?

Mohamed Dilsad

Leave a Comment