Trending News

தேர்தலை பிற்படுத்த அலரி மாளிகையில் கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – அரசியல் கட்சிகளுக்கிடையிலான அலரி மாளிகை கலந்துரையாடல் தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே அரசியல் கட்சிகளுக்கிடையில் அலரி மாளிகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கே கூட்டு எதிர்க்கட்சி அதில் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் தொடர்ந்து தேர்தல்கள் பிற்படுத்தப்படுமானால் தேர்தல்கள் ஆணைக்குழு நூதனசாலையாக மாறும் நிலையே ஏற்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

“Ramadan celebrates true spirit of Islam” – Premier

Mohamed Dilsad

எவன் கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

Mohamed Dilsad

பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு

Mohamed Dilsad

Leave a Comment