Trending News

யாழில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு நாளை

(UDHAYAM, COLOMBO) – தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வடமாகாண சபை பிரதம செயலாளர் ,மாவட்ட செயலாளர்கள் ,அமைச்சு மற்றும் திணைக்களத்தின் தலைமை அதிகாரிகள் பிரதேச செயலாளர்களுக்கான செயலமர்வொன்று நாளை (07)  நடைபெறவுள்ளது.

நிதி மற்றும் ஊடத்துறை அமைச்சும், அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள இந்த செயலமர்வுக்கு அமைவாக வடமாகாண ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வும் நாளை இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள கிறீன் கிறாஸ் ( Green Grass  Hotel,Asservatham Lane, Jaffna ) ஹோட்டலில் நாளை காலை 9.00 மணிக்கு இந்த செயலமர்வு ஆரம்பமாகவுள்ளது.

Related posts

Dearo Agri සමාගම රට සහලින් ස්වයංපෝෂිත කිරීමට ‘එක මිටට ගොවි බිමට’ ව්‍යාපෘතිය සමග එක් වේ

Editor O

தேசிய மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Mohamed Dilsad

கூகுள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment