Trending News

சைட்டம் எதிர்ப்பு பேரணிக்கு தடைகோரிய மனு நிராகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான பேரணிக்கு தடைவிதிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம், இன்று நிராகரித்துள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவிருந்த பேரணிக்கு தடை விதிக்குமாறு பொலிஸார், நீதிமன்றத்தை கோரியிருந்தனர்.

கொழும்பு, கறுவாத்தோட்ட பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

Josh Gad finally speaks out about Penguin teases

Mohamed Dilsad

அம்ப சுஜீ எனும் சஜித் குமார கைது

Mohamed Dilsad

Sajith to be nominated as Opposition Leader

Mohamed Dilsad

Leave a Comment