Trending News

விஜய் திரைப்படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

(UDHAYAM, COLOMBO) – நடிகர் விஜய்யின நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெர்சல்’ திரைப்படத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், பாடலொன்றை பாடியுள்ளார்.

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி பாடல் பாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி, ‘நான் விரும்பும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் அண்ணாவின்

‘மெர்சல்’ திரைப்படத்தில் பாடல் பாடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘மெர்சல்’ திரைப்படத்தின் இசை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

1 முதல் 5 வரையான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

இராணுவத்தின் இப்தார் நிகழ்வு

Mohamed Dilsad

More rain in Sri Lanka likely

Mohamed Dilsad

Leave a Comment