Trending News

தீபாவளிக்கு வெளியாகவிருந்த ரஜினியின் 2.0 படம் தள்ளிவைப்பு!!புதிய வெளியீட்டுத் திகதியும் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – நடிகர் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் டைரக்சனில், ரஜினிகாந்த்-எமிஜாக்சன் நடிக்க, 2.0 திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஷ் கரன் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிக்கு சிறிது காலம் தேவைப்படுவதால் வெளியாகும் திகதியில்தா மதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

EU – Sri Lanka Investor Dialogue to Boost Trade and Investment from Europe

Mohamed Dilsad

ரகசிய திருமணம் செய்து கொண்ட இலியானா…

Mohamed Dilsad

US fires next shot in China trade war

Mohamed Dilsad

Leave a Comment