Trending News

சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO) – நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

தல அஜித்திற்க்கு ஓவியம் மூலம் வாழ்த்து கூறிய இலங்கை பெண்

Mohamed Dilsad

Mr Universe Noble King 2019 – திலுக ராஜபக்ஷ [PHOTOS]

Mohamed Dilsad

தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் பயப்படுகிறது?

Mohamed Dilsad

Leave a Comment