Trending News

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் மாற்றம் இல்லை

(UTV|COLOMBO) – எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தை குறைப்பதற்கு தாம் தயாராக இல்லையென அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருள் மானியம் பெற்று அதன் பயனை பயணிகளுக்கு வழங்கவே தாம் எதிர்பார்த்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சுய தொழில் தேசிய முச்சகரவண்டிகள் சங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Six Missing After U.S. Military Aircraft Collide off Japan

Mohamed Dilsad

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை

Mohamed Dilsad

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தம்

Mohamed Dilsad

Leave a Comment