Trending News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன் எச்சரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்றது உண்மை

(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கபட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் நடவடிக்கைகள் இன்றும்(23) இடம்பெறவுள்ளன.

குறித்த விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் கடந்த வாரம் இடம்பெற்றதுடன் இதன்போது சஹ்ரான் இலங்கையினுள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கை கடிதம் ஒன்று கடந்த 11 ஆம் திகதி வட கொழும்பு பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ பண்டாரவின் காரியாலயத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் இன்றைய தினம் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ பண்டார விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கவுள்ளதுடன் அதன் பின்னர் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த பொலிஸ் பரிசோதகர் உபேந்திரவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ලංවිම සේවකයෝ වෘත්තීය සමිති ක්‍රියාමාර්ගය දැඩි කරයි

Editor O

GB’s Morgan qualifies for big air final

Mohamed Dilsad

Facebook ‘to launch ads within videos’

Mohamed Dilsad

Leave a Comment