Trending News

விலகினாரா அமலாபால்??

(UDHAYAM, COLOMBO) – வடசென்னை படத்தில் இருந்து அமலாபால் கால்ஷீட் பிரச்சினையால் விலகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கவிருக்கும் வடசென்னை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தம் ஆன சமந்தா விலகியதையடுத்து அமலாபால் இப்படத்திற்குள் நுழைந்தார்.

ஆனால், அவரும் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. ஆனால், அவரோ தான் இப்படத்திலிருந்து விலகவில்லை என்பதை உறுதியாக கூறிவந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் அமலாபால் இப்படத்தில் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து அமலாபால் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தி இதுவரை வெளியாகவிட்டாலும் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, இப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதியும் விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

Mohamed Dilsad

“I will not join Government” – Chamal Rajapakse

Mohamed Dilsad

‘Charlie’s Angels’ are back with more spunk

Mohamed Dilsad

Leave a Comment