Trending News

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO) – நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் தினைக்காம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

පළමු පුරවැසියා පොත් ප්‍රදර්ශනය නරඹන්නට පැමිණෙයි.

Editor O

நடிகை கரீனாவிற்கு ராகுல் காந்தியின் மேல் காதல்?

Mohamed Dilsad

யுவனையே அசத்திய படம்

Mohamed Dilsad

Leave a Comment