Trending News

பிரபஞ்ச அழகியாக தென்ஆப்பிரிக்க மாடல் அழகி தேர்வு [PHOTOS]

(UTV|COLOMBO) – அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொண்டனர். இவர்களில் தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, கொலம்பியோ, பியூர்டோ ரிகோ மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 5 அழகிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 26 வயதான மாடல் அழகி சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பியூர்டோ ரிகோவின் மேடிசன் ஆண்டர்சன் 2-வது இடத்தையும், மெக்சிகோவை சேர்ந்த சோபியா 3-வது இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Image result for miss universe 2019

Image result for miss universe 2019

Image result for miss universe 2019

 

Related posts

12 நோய்களுக்கு தடுப்பூசிகள் அறிமுகம்

Mohamed Dilsad

அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர்கள் யார் என்று தெரியுமா?

Mohamed Dilsad

Air Force Commander calls on PM

Mohamed Dilsad

Leave a Comment