Trending News

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் நியமனம் தொடர்பில் மறுப்பு

(UTV|COLOMBO) – அரசாங்க சார்பு ஊடக நிறுவனமான லேக் ஹவுஸின் எசோஸியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் (ANCL) தலைவராக பொறுப்பேற்கவுள்ளதாக வெளியான தகவலை ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் சரித்த ஹேரத் மறுத்துள்ளார்

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,

“.. தாம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளமை காரணமாக இந்த பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை.

எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்பவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற இணக்கம் பொதுஜன பெரமுனவின் உள்ளக கட்டமைப்பில் உள்ளது.

இதன் காரணமாக தாம் வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும், குறித்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும், பொதுத்தேர்தலில் குருநாகலில் போட்டியிடவுள்ளேன்..” என தெரிவித்துள்ளார்.

Related posts

Lotus Road closed temporarily

Mohamed Dilsad

Supreme Court resumes hearing of FR Petitions on Parliament dissolution for third and final day [UPDATE]

Mohamed Dilsad

Excise Dept to axe synthetic toddy industry from today

Mohamed Dilsad

Leave a Comment