Trending News

கடும் மழை – வீடுகள் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

(UTV|COLOMBO) – கோவை – மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி 2 பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Julian Assange: Wikileaks co-founder arrested in London

Mohamed Dilsad

அத்தனகலு ஓயா பெருக்கெடுப்பு – மக்கள் அவதானம்

Mohamed Dilsad

President vows to fight fraud and corruption

Mohamed Dilsad

Leave a Comment