Trending News

அனைத்து அரசியல் கட்சிகளதும் செயலாளர்களுக்கு அழைப்பு

(UTV|COLOMBO) – அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடலில், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படும். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களை மீள்திருத்தம் செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவாகும் பண செலவை குறைத்து அதற்கு பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடலின் போது ஆராயப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

වාහන ආනයනයේදී අයකරන බදු මෙන්න

Editor O

குவைட்டில் பணிக்கு சென்ற 26 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு

Mohamed Dilsad

கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment