Trending News

பிரதமர் தலதா மாளிகைக்கு விஜயம்

(UTVNEWS | COLOMBO) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

புதிய பிரதமராகக் கடமையேற்றதைத் தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலாதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார்.

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமரை தியவதன நிலமே பிரதீப் நிலங்க சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.

தொடர்ந்து பிரதமர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்று கொண்டார். அத்தோடு பிரதமர் இலங்கை இராமான்ய பீடத்தின் மகாநாயக்கர்களையும் சந்தித்து ஆசி பெற்றார்.

 

Related posts

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !

Mohamed Dilsad

Comprehensive security plan around Religious Places, schools from today

Mohamed Dilsad

ශෂීන්ද්‍ර රාජපක්ෂ අත්අඩංගුවට

Editor O

Leave a Comment