Trending News

மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி

(UTV|COLOMBO) – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்து வரும் மரக்கறி வகைகளின் தொகை அதிகரித்துள்ளமையினால் பல மரக்கறி வகைகளின் விலைகள் குறைவடைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவத்துள்ளனர்.

கடந்த 3 தினங்களாக ஒரு கிலோ போஞ்சி 20 ரூபா தொடக்கம் 40 ரூபா வரையில் விற்பனையாவதால் மரக்கறி வகைகளின் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. பெருந்தொகை மரக்கறி வகைகளை விற்பனை செய்யமுடியாமல் சில சந்தர்ப்பங்களில் திரும்ப வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கரட், லீக்ஸ், பீற்றூட் ஆகிய மரக்கறி வகைகள் தவிர்ந்த ஏனைய மரக்கறி வகைகள் 10 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையில் வெவ்வேறான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

வெள்ளரி, புடலங்காய், கத்தரி, பாகற்காய், தக்காளி முதலான மரக்கறி வகைகள் இன்று அதிகாலை தொடக்கம் பெருமளவில் தம்புள்ளை வர்த்தக மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாளை 24 மணி நேர நீர் வெட்டு…

Mohamed Dilsad

Airtel Changes the Game : Unlimited voice calls for Rs 98

Mohamed Dilsad

உலக தபால் தின முத்திரை கண்காட்சி கண்டியில்…

Mohamed Dilsad

Leave a Comment