Trending News

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது [VIDEO]

(UTVNEWS | COLOMBO) -கோவாவில் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு, ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கி ​கெளரவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதை ரசிகர்களுக்‍கும் உடன் பணியாற்றியவர்களுக்‍கும், தமிழ் மக்‍களுக்‍கும் சமர்ப்பிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கோவாவில், 50ஆவது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்துவைத்தனர்.

இந்த விழாவில், நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரஜினிகாந்துக்கு வழங்கினார்.

இந்த விழாவில், பிரான்ஸ் நட்சத்திர நடிகை இசபெல்லா ஹப்பர்ட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. நடிகர் அமிதாப் பச்சனுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. மேலும், இந்த திரைப்பட விழாவில், 76 நாடுகளைச் சேர்ந்த 250 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இவற்றில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

O/L results to be issued on Thursday

Mohamed Dilsad

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதி

Mohamed Dilsad

Marawila five-storied building fire cause Rs. 150 million damage

Mohamed Dilsad

Leave a Comment