Trending News

சகல வாக்காளர்களும் சுதந்திரமாக தமது வாக்கினை பதிவு செய்வதற்கான சூழல்

(UTV|COLOMBO) – இன்று(16) இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் நாடு பூராகவும் உள்ள சகல வாக்காளர்களும் சுதந்திரமாக தமது வாக்கினை பதிவு செய்வதற்கான சூழல் தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய பொலிஸார் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறையினர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், தேவையற்ற பிரசாரங்களையும் வதந்திகளையும் நம்பி ஏமாறாது மக்கள் தமக்கான வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்யுமாறு ஜனாதிபதி சகல வாக்காளர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ள ஒரு நாட்டில் பிரஜைகளின் அதிகாரமும் முதன்மை கடமையாகவும் பொறுப்பாகவும் அமைவது தமது விருப்புக்குரிய ஒருவருக்காக தமது வாக்கினை பதிவு செய்வதே ஆகும் என்பதையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

Related posts

Mahendran has reportedly escaped S’pore: Vasudeava

Mohamed Dilsad

පළාත් පාලන ආයතන සඳහා බරවාහන මිලට ගැනීමේ තීරණයක්

Editor O

Al Ain shock River Plate in Club World Cup

Mohamed Dilsad

Leave a Comment