Trending News

பாபர் மசூதி ஹிந்துக்களுக்கே சொந்தம் – தீர்ப்பு வெளியாகியது

(UTV|COLOMBO) – அயோத்தியில் பாபர் மசூதி, வெற்றிடத்தில் கட்டப்படவில்லை என இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று(09) தீர்ப்பு வழங்கி வருகிறது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினர்.

தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார். தீர்ப்பில் அவர் கூறியதாவது:

பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது. இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல. ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது. மசூதியில் 1949-ம் ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்டன. மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை ; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது. தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. அயோத்தியில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. பாபர் மசூதியில் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை

Related posts

கஞ்சிபானை இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Southampton teams name Mahela, Charlotte Edwards as coaches

Mohamed Dilsad

கல்வீச்சு தாக்குதலில் ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் காயம்

Mohamed Dilsad

Leave a Comment