Trending News

பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் மாநாடு இன்று

(UTV|COLOMBO) – பொதுநலவாய ஒன்றியத்தின் நீதி அமைச்சர்களின் நீதிதுறை அதிகாரிகளின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகி எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் திருமதி பற்றீசியா ஸ்கொட்லன் ஆகியோர் தலைமையில் குறித்த இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

பொது நலவாய நாடுகள் மத்தியில் நிலவும் சட்ட சட்டமைப்பு மற்றும் சட்டம் தொடர்பிலான அறிவை பரிமாறுதல், நீதிமன்ற வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சட்ட ரீதியிலான ஒத்துழைப்பு, சிவில் சட்ட கட்டமைப்பு மற்றும் ஊழலை இல்லாதொழித்தல், சட்ட கட்டமைப்பை ஒழுங்குறுத்துதல் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் மத்தியில் சட்டவாட்சி புரிந்துணர்வுடன் செயற்படுதல் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நீர் வழங்கல் மற்றும் நுகர்வோர் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

Mohamed Dilsad

யுக்ரேனிய கடற்படை கப்பல் மீது ரஷ்யா தாக்குதல்

Mohamed Dilsad

Leave a Comment