Trending News

திடீர் திருமணம் செய்துக் கொண்ட லக்ஷ்மி

(UTV|COLOMBO) – லஷ்மி குறும்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை லக்ஷ்மி பிரியா, திடீர் என்று எழுத்தாளரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து லக்ஷ்மி பிரியா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

லட்சுமி பிரியா சினிமாவில் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை என்பதால் குறும் படங்களில் நடிப்பதில் மிகவும் ஆர்வம் செலுத்தினார். இந்த குறும்படம் வெளியான சிலமணி நேரங்களிலேயே மக்களிடத்தில் மிகவும் பிரபலமானது.

தற்போது நடிகை லக்ஷ்மி பிரியா, பெங்களூரை சேர்ந்த எழுத்தாளர் வெங்கட்ராகவன் என்பவரை திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

லக்ஷ்மி -வெங்கட்ராகவன் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related posts

அரிசியின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

Regulations of the Carbon Tax to be amended

Mohamed Dilsad

மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் ஜனவரி முதல் அமர்வுகளை தொடங்குகின்றன

Mohamed Dilsad

Leave a Comment