Trending News

இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இருந்து ஸ்டார்க் விலகல்

(UTV|COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இருபதுக்கு – 20 தொடரின் இரண்டாவது போட்டியில் இருந்து, அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.

அவரது சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஸ்டார்க் சகோதரர் பிராண்டன் சிறந்த உயரம் தாண்டுல் வீரராவார்.

காப்பா நகரில் எதிர்வரும் புதன்கிழமை(30) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இருபதுக்கு -20 தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி பில்லி ஸ்டேன்லேக் அல்லது சீன் அப்போட் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

குறித்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையும் பெற்று காணப்படுகின்றது.

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரிய ஸ்டீவன் ஸ்மித்

Mohamed Dilsad

யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று திறப்பு

Mohamed Dilsad

Leave a Comment