Trending News

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக விஷேட பொலிஸ் செயற்பாட்டு பிரிவு

(UTVNEWS | COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக விஷேட பொலிஸ் செயற்பாட்டு பிரிவை அமைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தேர்தலுக்கான வாக்களிப்பு 47 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

குறித்த மத்திய நிலையங்கள் எல்பிட்டிய, பிட்டிகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமையவுள்ளது. பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் தேர்தல் முடியும் வரையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் இந்த பொலிஸ் செயற்பாட்டு பிரிவு செயற்படுமென்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Lotus Road closed due to protest

Mohamed Dilsad

රජයේ නිලධාරීන්ට 2025 සඳහා විශේෂ අත්තිකාරම් මුදලක්

Editor O

නිල ඡන්ද දැන්වීම් පත්‍රිකා නොලැබුණ අයට දැනුම්දීමක්

Editor O

Leave a Comment