Trending News

இலங்கை தொழில் நிறுவன கண்காட்சியின் திறன் மேம்பாடு தொடர்பான பட்டறைகள்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை தொழில் நிறுவன வேலைத்திட்டம் “2025 தூரநோக்கு” க்கு ஏற்ப ஆரம்பிக்கப்பட்டது. 2025 வருடத்திற்குள் இலங்கையை பணக்கார நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் பொருளாதார பார்வையாகும்.

“2025 தூரநோக்கு” இலங்கையை மிகவும் போட்டித்தன்மையினையும், வாழ்க்கை நிலைப்பாட்டினையும் மாற்றுவதற்கான சீர்திருத்த போக்கை, தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் முதல் சமூக பாதுகாப்பு நிகர திட்டங்கள் ஊடாக, தொழில்நுட்ப கையகப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழில் நிறுவன வேலைத்திட்டம், “2025 தூரநோக்கு” க்கு ஏற்ப ஆரம்பிக்கப்பட்டது. 100000 தொழில் முனைவோர்களை 2025 வருடத்திற்குள் உருவாக்குவதை நோக்காக் கொண்டதாகும். இவ் வேலைத்திட்டத்தினூடாக 80 பில்லியன் ரூபாய்க்கு கடன் வசதிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கை தொழில் நிறுவன வேலைத்திட்டம் நம் நாட்டு மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வதுடன் அதிக பொதுமக்களின் பங்குபற்றல் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்தலுக்காகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கை தொழில் நிறுவன தேசிய கண்காட்சியின் 2018 ம் வருட தொடராகும். இக் கண்காட்சியின் தொடரானது குறிப்பாக கவனம் செலுத்தியது தொழில் முனைவோரை மீண்டும் எழுப்புதல் மற்றும் ஒரு பண்டைய காலங்களில் நிலவிய இலங்கையின் ஆத்மாவாகும்.

இக் கண்காட்சிகளில் முதல் கண்காட்சி மொனராகலையில் 2018 ஆகஸ்ட் மாதமும் இரண்டாவது அநுராதபுரத்தில் 2019 ஜூலை மாதமும் நடைப்பெற்றது. மூன்றாவது கண்காட்சி தொடர் எதிர்வரும் செப்டம்பர் 07, 08, 09, 10 ஆம் திகதிகளில் யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. (யாழ்பாண டச்சு கோட்டையின் முன்னால்) ​

இது இரு தாசாப்பத்திற்கு பிறகு யாழ்பாணத்தில் நடைப்பெறுகின்ற தேசிய கண்காட்சியாகும், இதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் இருந்து 400000 க்கும் அதிகமான பொதுமக்கள் பஙகேற்பார்களென எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Related posts

Four Accomplices of Kimbule-Ele Guna Arrested

Mohamed Dilsad

JVP hands over 20th Amendment to Constitution

Mohamed Dilsad

Air Force bags National Taekwondo title

Mohamed Dilsad

Leave a Comment