Trending News

நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி

(UTVNEWS|COLOMB0)- இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் திம் சௌத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 175 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லசித மாலிங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளதுடன், இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T20 போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி இதேமைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related posts

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘வெடிகந்த கசுன்’ கைது

Mohamed Dilsad

அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

ශ්‍රී ලංකා මහ බැංකුවේ හිටපු අධිපති අර්ජුන මහෙන්ද්‍රන්ට නොතීසි.

Editor O

Leave a Comment