Trending News

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி – 06 பேர் காயம்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு – கண்டி பிரதான வீதி நிட்டம்புவ – கலல்பிடிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பில் இருந்து கதுறுவலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் காயமடைந்தவர்கள் வதுபிடிவல மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பாரவூர்தியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சர் அகில விராஜ் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

Mohamed Dilsad

பலத்த காற்று காரணமாக 17,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிப்பு

Mohamed Dilsad

மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

Leave a Comment