Trending News

சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மாத்தறையில்

(UTV|COLOMBO) தேசிய ஒலிம்பிக் குழு ஏற்பாடு செய்த சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மாத்தறையில் நடைபெறுகிறது.

சுற்றாடலை பாதுகாப்போம் என்பதே இதன் தொனிப்பொருளாகும். கரையோரத்தை பாதுகாப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் சில்வா தெரிவித்தார்.

தேசிய ஒலிம்பிக் தின கொண்டாட்டத்திற்கு அமைவாக பல வேலைத்திட்டங்கள் மாத்தறையில் நடைபெறுகிறது. அமைச்சர் சாகல ரத்ணாயக்க இதில் பிரதம அதிதியாக கலந்துக்கொள்கிறார்.

மேற்படி ஒலிம்பிக் வெற்றிக்கிண்ண போட்டியாளர் சுசந்திகா ஜயசிங்கவின் ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை காண்பதற்கான வாய்ப்பு மாத்தறை மாணவர்களுக்கு இன்று கிடைத்துள்ளது.

 

 

 

Related posts

யாழில் இருந்து முதல் விமானம் இன்று சென்னைக்கு நோக்கி

Mohamed Dilsad

Sri Lanka, India to jointly develop Trincomalee oil tank farm

Mohamed Dilsad

முட்டை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Mohamed Dilsad

Leave a Comment