Trending News

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நேற்று இரவு அனுராதபுரம் – திருகோணமலை வீதி பங்குளம கோவில் அருகாமையில் இடம்பற்ற விபத்தில் பாதுகாப்பு பிரிவினை சேர்ந்த  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்து கொண்டிருந்த லொறி  ஒன்றுடன் மோதுண்டு  விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹொரவப்பத்தான பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

Indian PM to unveil 400 Tata Nano electric cars – [VIDEO]

Mohamed Dilsad

ලංකා විදුලිබල මණ්ඩලය විදුලිය මිලදී ගැනීමේ නව ගිවිසුමකට එළඹෙයි

Editor O

மழையுடனான காலநிலை…

Mohamed Dilsad

Leave a Comment