Trending News

சுவையான சூப்பர் ஸ்பைசி நண்டு கிரேவி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

நண்டு – 1 கிலோ

வெங்காயம் – 3 (நறுக்கியது)

தக்காளி – 4 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

வரமிளகாய் – 4

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

மிளகு – 2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

மல்லி – 2 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்

முந்திரி – 4

பச்சை மிளகாய் – 3-4

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிது

கொத்தமல்லி – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் நண்டை சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடிகட்டிக் கொண்டு, பின் ஒரு பாத்திரத்தில் அதனைப் போட்டு, நண்டு மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் பாத்திரத்தை இறக்கி, நீரை வடிகட்டி விட வேண்டும். (இப்படி செய்வதால் நண்டு வாடை அதிகம் இருக்காது மற்றும் சாப்பிடும் போது நண்டு மென்மையாக இருக்கும்.)

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லி சேர்த்து லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, அதோடு தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் நண்டு சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, 15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி தயார்!!!

 

 

 

Related posts

மலையகத்தில் வான்கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

தமிழ்த் தலைமைகளை பலப்படுத்த தவறாதீர்கள்….

Mohamed Dilsad

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Leave a Comment