Trending News

சுற்றிவளைப்புகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 27 பேர் கைது

(UTV|COLOMBO) இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் அடிப்படையில்  27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மினுவாங்கொட, கல்லொலுவ  பகுதியில் சந்தேகத்துக்கிடமாக 13 பேரும்,மொரட்டுவ பகுதியில் மூவர், ஹவ்லொக் சிடியில் இருவர், குருநாகல் மற்றும் வெலிசர ஆகிய பகுதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி பண்டாரகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

Made-in-Indonesia smartphone coming soon from Xiaomi

Mohamed Dilsad

පළාත් සභා ඡන්දය තියන්න රටේ නීතියක් නැහැ – මැතිවරණ කොමසාරිස් ජෙනරාල් සමන් ශ්‍රී රත්නායක

Editor O

තැපැල් ඡන්දය ප්‍රකාශ කිරීමේදී අනන්‍යතාව තහවුරු කිරීමට වලංගු හැඳුනුම්පත්

Editor O

Leave a Comment