Trending News

ஊடகவியலாளர்களுக்கான கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) ஊடகவியலாளர்களின் தொழில் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 2019 – மாத்ய அருண என்ற விஷேட கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரம் மற்றும் விண்ணப்பத்தை www.media.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் அல்லது 0112513459 / 0112513460 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த கடன் திட்டத்தின் கீழ் கடனை பெறும் ஊடகவியலாளர்கள் முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன் அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கவேண்டும். விண்ணப்பங்கள் பணிப்பாளர் ஊடகம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு எஸிதிஸி மெதுர இலக்கம் 163 கிருளப்பனை மாவத்தை பொல்ஹேன்கொட கொழும்பு 5 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

Related posts

கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

Mohamed Dilsad

உலகில் மிக அழகான பெண் இவரா?

Mohamed Dilsad

Cloudy skies, showers expected today

Mohamed Dilsad

Leave a Comment