Trending News

இரண்டு மாடி வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீப்பரவல்

(UTV|COLOMBO) அக்மீமன – குருந்துவத்த – இசிவர பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வர்த்தக கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் புத்தக விற்பனை நிலையமொன்றும் மற்றும் பாதணி விற்பனை நிலையமொன்றும் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீப்பரவலை காவற்துறையினர் மற்றும் காலி நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த கட்டிடத் தொகுதியின் கீழ் மாடியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையத்தில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் , பின்னர் அருகில் அமைந்துள்ள பாதணி விற்பனை நிலையத்திற்கும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

பிரெக்ஸிட் தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வி…

Mohamed Dilsad

பொல்கஹவெல தொடரூந்து விபத்து

Mohamed Dilsad

40 Sri Lankan refugees to return from Tamil Nadu

Mohamed Dilsad

Leave a Comment