Trending News

‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) இந்திய மற்றும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் மித்ர சக்தி 6 என்ற கூட்டு இராணுவப்பயிற்சி இன்று(26) தியதலாவையில் உள்ள கெமுனு காலாட் படையணி வளாகத்தினுள் ஆரம்பமாகவுள்ளது.

இந்த பயிற்சியில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் 120 பேர் பங்கேற்கவுள்ளனர்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக வழிக்காட்டலின் கீழ் இராணுவ காலாட்படை பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான அவர்களது கண்காணிப்பின் கீழ் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் குமார ஜயபத்திரன தலைமையில் இந்த பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

இன்று 10 மணிநேர நீர் விநியோகத்தடை

Mohamed Dilsad

Drivers who ignore railway crossing signals face Rs.25,000 fine

Mohamed Dilsad

பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக 30,830 மாணவர்கள் தெரிவு

Mohamed Dilsad

Leave a Comment