Trending News

ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய அபிவிருத்தி தொடர்பில் பங்கொக்கில் நாளை(07) ஆராய்வு

(UTV|COLOMBO) ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் நிறைவேற்றுக்குழுக்கூட்டம் நாளை (07) தாய்லாந்து, பங்கொக்கில் நடைபெறவுள்ளது.  இந்த மாநாட்டில் ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் உப தலைவரும், கூட்டுறவு இளைஞர் வலுவூட்டல் அமைப்பின் தலைவருமான எம்.எஸ். முஹம்மது றியாஸ் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் நசீர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அமைப்பின் தலைவர் சந்திப்குமார் நாயக் தலைமையில் இடம்பெறும் இந்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் பங்களதேஷ், சீனா, ஈரான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.

ஆசிய மற்றும் பிராந்திய நாடுகளின் கூட்டுறவின் அடிப்படையிலான விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு இந்த துறையில் நவீனத்துவங்களை புகுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

முதன் முதலாவதாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒக்டோபர் மாதம் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்திய சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி தொடர்பான ஏற்பாடுகள் இந்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் ஆராய்யப்படும் என அமைப்பின் உப தலைவர் ரியாஸ் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

Seven bodies found in Western Australia

Mohamed Dilsad

New York’s Fearless Girl statue to stay on till March 2018

Mohamed Dilsad

தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு…

Mohamed Dilsad

Leave a Comment