Trending News

வாஸ் குணவர்த்தனவின் மேன்முறையீட்டு மனு மார்ச் மாதம் 12ம் திகதி-உச்ச நீதிமன்றம்

(UTV|COLOMBO) பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட 06 பேர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி அழைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு நீதியரசர்களான சிசிர தி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, விஜித மலல்கொட, பிரீதி பத்மன் சுரசேன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று (06) விசாரணைக்கு வந்தது.

வர்த்தகர் முஹமட் சியாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தமக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும் இதன் காரணமாக அந்த குற்றங்களில் இருந்து தம்மை குற்றமற்றவர்களாக விடுதலை செய்ய உத்தரவிடுமாறும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவரும் தமது மேன்முறையீட்டு மனுவில் கூறியுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

Related posts

தேரரை கடத்திய அறுவர் கைது

Mohamed Dilsad

Public cannot be inconvenienced like this-Arjuna Ranathunga

Mohamed Dilsad

Japanese Expert Team submits report to minimize the disaster situations

Mohamed Dilsad

Leave a Comment