Trending News

சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்

(UTV|INDIA)-இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடித்ததாக விமர்சனங்கள் கிளம்பின.
பின்னர் பிக்பாஸ் சீசன்-2விலும் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். தற்போது கழுகு-2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜாம்பி படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் போட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் பொழுது போக்கு பூங்கா ஒன்றுக்கு அவர் சென்று இருந்தார்.
அப்போது ரசிகர்கள் யாஷிகா ஆனந்தை சூழ்ந்தனர். பலர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். சிலருக்கு கையில் பேப்பர் எதுவும் இல்லாததால் ரூபாய் நோட்டை யாஷிகாவிடம் நீட்டி கையெழுத்து கேட்டனர். அவரும் ரூபாய் நோட்டில் கையெழுத்து போட்டு கொடுத்தார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மட்டுமே ரூபாய் நோட்டில் கையெழுத்திட அதிகாரம் உண்டு. யாஷிகா ஆனந்த் ரூபாய் நோட்டில் கையெழுத்திட்டது தவறு என்று பலரும் அவரை சமூக வலைத்தளத்தில் கண்டித்து வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

අධිවේගී මාර්ගවල වේගය සීමා කරයි.

Editor O

High possibility for evening thundershowers

Mohamed Dilsad

Windy condition expected to enhance

Mohamed Dilsad

Leave a Comment