Trending News

கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி 04 பேர் உயிரிழந்துள்ளனர்.

பமுனுகம – ஏபாமுல்ல கடற்பரப்பிற்கு சென்று சிலர் நீராடிக் கொண்டிருந்த போது பெண் ஒருவர் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

45 வயதுடைய குறித்த பெண் போபிய – துடுவ பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வென்னப்புவ – வேலக்கந்தி தேவாலயம் மற்றும் மாத்தறை – மடிகே பிரதேசங்களில் அலையில் சிக்கி இரு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே பமுனுகம – தெலதுர நீர்தேகத்தில் நீரில் மூழ்கி 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

“Thank you Mumbai Police for being by our side,” writes Anil Kapoor

Mohamed Dilsad

No fuel price revision in April

Mohamed Dilsad

ප්‍රභු ආරක්ෂක නිලධාරීන්ට මින් පසු තහනම් වැඩ ලේඛනය මෙන්න

Editor O

Leave a Comment