Trending News

போலி ஆபரணங்களை அடகுவைக்கச்சென்ற பெண் ஒருவர் உட்பட நான்குபேர் கைது

(UTV|COLOMBO)-நிக்கரவெட்டிய – கொபெய்கனேயில் உள்ள அரச வங்கி ஒன்றில், போலி ஆபரணங்களை அடகுவைக்கச்சென்ற பெண் ஒருவர் உட்பட நான்குபேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கி முகாமையாளரினால், வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என கொபெய்கனே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சந்தேகத்துக்குரியவர்கள் கொண்டுவந்த ஆபரணங்களும், அவர்கள் பயணித்த வாகனமும் காவல்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், பாதெனிய , அகலவத்தை, சியம்பலாபே மற்றும் பண்டாரகொஸ்வத்த முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

அன்னாசி செய்கை விஸ்தரிப்பு

Mohamed Dilsad

Malaysian PM arrives tomorrow

Mohamed Dilsad

Water level rising in Nilwala Ganga, be vigilant – Irrigation Dept.

Mohamed Dilsad

Leave a Comment